இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. முக்கிய அறிவிப்பு பிப்.15 வரை நெட் பேங்கிங், யூபிஐ, மொபைல் பேங்கிங்செயல்படாது என அறிவிப்பு !
இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு நெட் பேங்கிங் உள்ளிட்ட சேவைகள் வரும் 15ஆம் தேதி வரை தடைப்படும் என வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப் பழைமையான அரசு துறை வங்கிகளில் ஒன்றான அலகாபாத் வங்கி விரைவில் இந்தியன் வங்கியுடன் பிப்ரவரி 15ஆம் தேதியன்று இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட உள்ளது
இதனால் தற்போது அதற்காக வங்கி வாடிக்கையாளர்கள் இணைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதனால் பிப்ரவரி 15ஆம் தேதி காலை 9மணி வரை இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு நெட் பேங்கிங், ஏடிஎம், யூபிஐ, மொபைல் பேங்கிங் உள்ளிட்ட சேவைகள் கிடைப்பதில் சிக்கல் இருக்குமென அந்த வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப்பட்ட பிறகு அனைத்து சேவைகளையும் வழக்கம் போல பயன்படுத்த முடியும்.
Kindly make a note of the following information and plan your banking accordingly so it’s a smooth transition. To Know More: https://t.co/f9XoLjXmfM#IndianBank #TwiceAsGood #Announcemen pic.twitter.com/BWeyuX6aGy
— Indian Bank (@MyIndianBank) February 12, 2021
Tags: தமிழக செய்திகள்