மார்ச் 1 முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
வருகின்ற மார்ச் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி முதல்கட்டமாக ஜன.,16 முதல் சுகாதார பணியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு அவர்களுக்கு தற்போது இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் கூறியதாவது:
நாடு முழுவதும் மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் அதேபோல், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏதேனும் நோய் இருந்தால் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும். என்றும் அவர் கூறினார்.
Tags: தமிழக செய்திகள்