FACT CHECK வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பொல்லார்ட் கார் விபத்தில் இறந்து விட்டாரா? உண்மை என்ன??
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் கேரன் பொல்லார்ட் கார் விபத்தில் இறந்து விட்டார் என ஒரு செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
முதலில் இந்த தகவல் யூடியூப்பில் தான் அவர் கார் விபத்தில் இறந்துவிட்டார் என பரவியது ஆனால் இது வரை எந்த ஒரு முண்ணனி மீடியாக்களும் செய்தி வெளியிட வில்லை
அதன் பின்பு அவரது சமூக வலைதள கணக்குகளை பார்த்தபோது அது போல் எதுவும் குறிப்பிடவில்லை
அதன் பின்பு கேரன் பொல்லார்ட் நலமுடன் தான் உள்ளார் என அறியமுடிந்தது மேலும் கேரன் பொல்லார்ட் தற்போது அபுதாபி டி 10 லீக் 2021 இல் விளையாடிக் கொண்டிருக்கிறார். அங்கு அவர் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணிக்கு கேப்டனாக உள்ளார்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி