Breaking News

FACT CHECK: கமலஹாசன் காருக்கு இன்ஸூரன்ஸ் கட்டலையா? உண்மை என்ன? ஆதாரங்களுடன்

அட்மின் மீடியா
0

 கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  நேர்மையின் நாயகன் நம்ம ஆண்டவரின்  காருக்கு இன்சூரன்ஸ் காலாவதியாகி 10 மாதம் ஆகி விட்டது  என்று  ஒரு புகைபடத்தை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 






அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

நடிகர் கமலஹாசன் அவர்களுடைய காருக்கு இன்சூரன்ஸ் இல்லை என்பது தவறானது ஆகும்


அதாவது  இந்திய அரசின் அதிகார பூர்வ எம் பரிவாஹன் ஆப் என்பது வாகனங்கத்தின் பதிவு எண்ணை அதில் பதிவு செய்தால் அதில் நாம் பதிவு செய்த வாகன பதிவு எண்ணின்  உரிமையாளர் பெயர், வாகன வகை , இன்சூரன்ஸ் காலம், வாகன முடிவு தேதி என பல விவரங்கள் வரும்

அது போல் அந்த எம் பரிவாஹன் ஆப்பில்  நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்களுடைய காரின் எண் TN07CS 7779 ஐ  பதிவு செய்தால் காரின் இன்சூரன்ஸ் 2020 மார்ச் 6-ம் தேதியுடன் முடிவடைந்ததாகவே காண்பிக்கிறது.

அதனை உண்மை என நம்பி அந்த தகவல் இனையத்தில் வைரல் ஆகியது. அந்த தகவலை  பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றார்கள்


ஆனால் 

அதே இந்திய அரசின் அதிகாரபூர்வ வாஹன் இணையதளத்தில் அதே நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்களுடைய காரின் எண் TN07CS 7779 ஐ  பதிவு செய்தால் 2022 மார்ச் 6-ம் தேதி வரை இன்சூரன்ஸ் உள்ளதாக காண்பிக்கின்றது


எம்பரிவாஹன் செயலியில் சில தரவுகள் அப்டேட் ஆகாமல் உள்ளது என்பதையே இது காண்பிக்றத



எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்


Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback