Breaking News

FACT CHECK : வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,800 உதவித்தொகை வழங்குகிறதா மத்திய அரசு? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,800 உதவித்தொகை மத்திய அரசு அறிவித்துள்ளதாக வலம் வரும் வாட்ஸ்அப் செய்தி போலியானது என்று மத்திய அரசின் செய்தி நிறுவனம் PIB கூறியுள்ளது. 

 


18-50 வயது வரம்புக்குள் இருக்கும் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் வகையில் ஒரு திட்டத்தை பிரதமர் அறிவித்திருக்கிறார். 

அந்த திட்டத்தின் படி 18-25 வயதினருக்கு ரூ.1,500 ம் 

25-30 வயதினருக்கு ரூ.2,000 ம்

31-35 வயதினருக்கு ரூ.3,000 ம்

36-45 வயதினருக்கு ரூ.3,500 ம்

46-50 வயதினருக்கு ரூ.3,800 ம்

உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அதற்க்கு கீழ் உள்ள லிங்கில்  உங்கள் தகவல்களைப் பதிவுசெய்ய வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது

 

ஆனால் அச்செய்தி போலியானது என்று மத்திய அரசின் செய்தி நிறுவனமான Press Information Bureau (PIB) மறுப்பு தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக அந்நிறுவனம் ட்விட்டரில் இதுபோன்ற ஒரு திட்டத்தை மத்திய அரசு அறிவிக்கவில்லை. உதவித்தொகை வழங்கப்படும் என்பது போலியான செய்தி. இதுபோன்ற செய்திகளை  யாரும் நம்பாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

 

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback