Breaking News

#Breaking: இந்தோனேசியாவில் SJ182 பயணிகளுடன் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் மாயம்!

அட்மின் மீடியா
0

இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் இருந்து போன்டினாக்கை நோக்கி சென்றுகொண்டிருந்த ஸ்ரீவிஜயா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான "போயிங் 737" ரக விமானம், ரேடாரில் இருந்து மாயமானது.என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

 


இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட விமானத்துடன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாகவும், விமானத்தைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து போண்டியானாக் பகுதிக்குப் புறப்பட்ட ஸ்ரீவிஜய விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடாரிலிருந்து மறைந்துள்ளது.

போயிங் 737 ரக விமானம், 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது ரேடாரிலிருந்து மறைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் மாயமான விமானத்தில் 46 பெரியவர்கள், 7 சிறுவர்கள், 3 குழந்தைகள் உள்பட 56 பேர் பயணிகளுடன் விமானப் பணியாளர்களும் சேர்த்து 62 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback