வன்முறை தூண்டும் விதமாக பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்விட்டர்,பேஸ்புக், இன்ஸ்டாகிராம், கணக்குகள் அனைத்தும் முடக்கம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று நடைபெற்று வந்தது.
வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய டிரம்ப் தான் பேசிய வீடியோக்களை டுவிட்டரில் பேஸ்புக்கிலும் பதிவு செய்தார். இந்த பேச்சால் இன்று டிரம்ப்பின் ஆதராவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டது குறிப்பிடதக்கது
வன்முறையை தூண்டும் வகையில் இருந்த அந்த வீடியோக்களை டுவிட்டர், பேஸ்புக், யூடியூப் ஆகிய நிறுவனங்கள் தங்கள் பக்கங்களில் இருந்து உடனடியாக நீக்கினார்கள்ர்.
மேலும் விதிகளை மீறியதற்காக அதிபர் டிரம்பின் ட்விட்டர்,பேஸ்புக், இன்ஸ்டாகிராம், கணக்க்குகள் அனைத்தும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது
டுவிட்டர் நிறுவனம் அடுத்த 12 மணி நேரம் டுவிட்டர் பக்கத்தை டிரம்ப் பயன்படுத்த முடியாத நிலைக்கு முடக்கப்பட்டுள்ளது என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல் அடுத்த 12 மணி நேரம் பேஸ்புக் பக்கத்தை டிரம்ப் பயன்படுத்த முடியாத நிலைக்கு முடக்கப்பட்டுள்ளது
மேலும் 24 மணிநேரம் இன்ஸ்டாகிராம் பக்கத்தை டிரம்ப் பயன்படுத்த முடியாத நிலைக்கு முடக்கப்பட்டுள்ளது
Tags: வெளிநாட்டு செய்திகள்