Breaking News

புனேவில் இருந்து கொரானா தடுப்பூசி கோவிஷீல்டு விநியோகம் தொடக்கம்..! தமிழகத்திற்கு இன்று தடுப்பூசிகள் வருகை

அட்மின் மீடியா
0

 நாடுமுழுவதும் கரோனா தடுப்பூசி போடும் முகாம் வரும் 16-ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் அதற்குத் தேவையான தடுப்பூசிகள் இன்று புனே நகரில் உள்ள சீரம் மருந்து நிறுவனத்திலிருந்து இன்று அதிகாலை 13 நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.



மகாராஷ்டிராவின் புனே சீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து கொரோனாவை தடுக்கும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு விநியோகிக்கும் பணி இன்று அதிகாலை தொடங்கியது.


முதல் கட்டமாக 3 டிரக்குகளில் கோவிஷிலீடு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு புனே சர்வதேச விமான நிலையம் சென்றடைந்தன.

நாட்டின் 13 இடங்களுக்கு 8 விமானங்கள் மூலம் இந்த தடுப்பூசிகள் கொண்டு சேர்க்கப்பட உள்ளன. 

சென்னைக்கு இன்று காலை 11 மணி யளவில் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்து சேரும் என தெரிகிறது.


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback