Breaking News

பொங்கல் சிறப்பு பேருந்துகள் : எந்த பேருந்துகள் எங்கிருந்து செல்லும் - முழு விபரம்

அட்மின் மீடியா
0

பொங்கல் சிறப்பு பேருந்துகள்: சென்னையில் மொத்தம் 6 பேருந்து நிலையம்.! முழு அட்டவணை.!

                                      

சென்னையிலிருந்து பின்வரும் பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்


 

மாதவரம் புதிய பேருந்து நிலையம்:-

செங்குன்றம் வழியாக பொன்னேரி , கும்மிடிபூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள் .

 

கே.கே. நகர் மா.ந.போ.கழக பேருந்து நிலையம்:-

ECR வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் 

 

தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்  MEPZ:-

திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் .

 

தாம்பரம் இரயில் நிலையப் பேருந்து நிறுத்தம்:-

திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி , நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர் , சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

 

பூந்தமல்லி பேருந்து நிலையம்:-

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி செல்லும் பேருந்துகள்.

 

புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேடு:-

மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத்தவிர, இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் 

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு

Tags: தமிழக செய்திகள்

Share this