பார்வையற்றோர் மற்றும் வாய்பேச இயலாத செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு செல்போன் பெற விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
பார்வையற்றோர் மற்றும் வாய்பேச இயலாத செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட செல்போன் 2020-2021ம் நிதியாண்டு முதல் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்க தகுதிகள்
பார்வையற்றோர் மற்றும் வாய்பேச இயலாத செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
18 வயது நிரம்பிய இளங்கலை பயிலும் மாணவ, மாணவியராகவோ,
வேலைவாய்ப்பற்ற பட்டதாரி மாணவ, மாணவியராகவோ,
சுயதொழில் மற்றும் தனியர் துறையில் பணிபுரிபவராகவோ இருக்கவேண்டும்.
மத்திய மற்றும் மாநில அரசு துறையில் பணிபுரியும் மாற்றுத் திறனாளி ஊழியர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது.
தேவையான ஆவணங்கள்
மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை
ரேஷன் கார்டு,
ஆதார் அட்டை,
வாக்காளர் அடையாள அட்டை
மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை
ஆகியவற்றின் நகல்கள் மற்றும் சான்றிதழ்கள்,
கல்லூரியில் மாணவராக இருந்தால் அதற்கான சான்று, சுயதொழில் புரிவதற்கான சான்று, வேலை வாய்ப்பற்ற பட்டதாரிகள், பட்டய சான்றிதழ் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
எங்கு விண்ணப்பிக்கவேண்டும்
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்
உடனடியாக உங்கள் பகுதி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தினை தொடர்பு கொள்ளுங்கள்
Tags: தமிழக செய்திகள்