Breaking News

தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு! செய்ய வேண்டியவை என்ன ?

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் இன்று முதல் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.பள்ளிகள் திறப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி ,



பள்ளி திறப்பின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை என்னென்ன?





அனைவரும் முகக்கவசம் அணிதல்.

கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல்.

சமூக இடைவெளி கடைபிடித்தல்

ஒரு வகுப்பிற்கு 25 மாணவர்கள் மட்டும் அனுமதி அளித்தல்,

தெர்மல் ஸ்கேனர் ( THERMAL SCANNER )கொண்டு உடல்

வெப்பநிலை பரிசோதித்தல்.

வைட்டமின் மற்றும் துத்தநாக (ZINC ) மாத்திரைகளை உரிய முறையில்

மாணவர்கள் சாப்பிடுவதை உறுதி செய்தல் .

பள்ளி வளாகத்தில் அதிக அளவிலான குப்பைத் தொட்டிகளை வைத்தல்.

கோவிட்-19 தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள், பதாகைகள் ஆகியவை பள்ளி வளாகத்தில் வைத்திருத்தல்.

25 மாணவர்களுக்கு மேல் ஒருவகுப்பறையில் அனுமதிக்கக்கூடாது.

பள்ளிவளாகத்தில் எச்சில் துப்புதல் கூடாது,

கழிவறை செல்லும் நேரம் , உணவு இடைவேளைகளில் கூட்டம்
கூடுதலை தவிர்த்தல்,

உணவு, தண்ணீர் பாட்டில்கள் , எழுதுபொருட்களை பரிமாறிக்
கொள்ளுதல் கூடாது.

இறைவணக்கக் கூட்டம், கலாச்சார நிகழ்வுகள், உடற்கல்வி/NSS/NCC/

தவிர்க்கப்படவேண்டும்.

மாணவர்கள் வகுப்பறைகளுக்கு வெளியே சுற்றித் திரிதல் கூடாது,

வகுப்பறையில் ஆசிரியர்கள், மாணவர்கள், முகக்கவசம் அகற்றுதல்
கூடாது,

முகக் கவசம் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை பொது வெளியில் எறிதல்

கூடாது.

தேவையற்ற பார்வையாளர்களை நுழைய அனுமதித்தல் கூடாது.

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback