Breaking News

கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்வது எப்படி? முழு விவரம்

அட்மின் மீடியா
0

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் எப்படி பதிவு செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



கடந்த ஒரு ஆண்டாக உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸூக்கு ஒருவழியாக மருந்து கண்டுபிடிக்க பட்டு அந்த மருந்து கூடிய விரைவில்  இந்தியாவிற்ற்க்கு பயன்பாட்டில் வர உள்ளது 


கொரோனா தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழுவின் பரிந்துரைப்படி, 5 கட்டங்களாக தடுப்பூசி வழங்கப்படும் என தெரிகின்றது

அதில் முதல்கட்டமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் சுகாதார ஊழியர்களுக்கு இந்த தடுப்பூசி முதலில் வழங்கப்படும். 

முன்களப் பணியாளர்களுக்கும் நகராட்சி ஊழியர்களுக்கும் அடுத்தகட்டமாக மூன்றாம் கட்டத்தில் வயதானவர்களுக்குத் தடுப்பூசி இதில் முதல் 60 வயதைக் கடந்தவர்களுக்கும், 

நான்கு மற்றும் ஐந்தாம் கட்டம் இந்த நான்காம் கட்டத்தில் பின்னர் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் தடுப்பூசி வழங்கப்படும். அதைத்தொடர்ந்து ஐந்தாம் மற்றும் இறுதிக் கட்டத்தில் மற்ற அனைவருக்கும் படிப்படியாகத் தடுப்பூசி அளிக்கப்படும்.என தெரிகின்றது

இந்நிலையில் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புவோர் பதிவுசெய்ய கோவின் (CoWIN) என்ற செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

இந்த செயலி இதுவரை பொது பதிவிறக்கத்துக்கு வரவில்லை. அதனால் இந்த செயலியை பெற விரும்புவோர் அதற்கான விண்ணப்பத்தை இணைய வழியில் தாக்கல் செய்ய வேண்டும்.

விண்ணப்பம் சரிபார்க்கப்பட்ட பின்னர் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு விவரங்கள் அவர்களது தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும். இந்த செயலியை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ள இதுவரை 75 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மருந்து முழுமையாக பயன்பாட்டுக்கு வந்த பிறகு கோவின் செயலி அனைவராலும் பதிவிறக்கம் செய்யமுடியும் என தெரிகிறது.

https://www.cowin.gov.in/login 

இந்த இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.

source: 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback