Breaking News

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் வரும் 8-ம் தேதி வரை கருத்து கேட்பு!

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் கொரானா ஊரடங்கினால் திறக்கபடாமல் உள்ள  பள்ளிக்கூடங்கள் திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 




இதன்படி கடந்த நவம்பர் மாதத்தில், பள்ளிகள் திறக்க முடிவெடுக்கப்பட்டு, பெற்றோரிடம் கருத்துக் கேட்கப்பட்டது. எனினும், பள்ளிகள் திறப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு பிறகு, பள்ளிகள் திறப்பது குறித்து, பெற்றோரிடம் கருத்துக் கேட்க, பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி, வரும் 8-ம் தேதி வரை 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்க உத்தரவிடப்பட்டுள்ளது.


மேலும் அதன் படி பெற்றோர் கருத்து கேட்பு கூட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது பள்ளிகல்விதுறை





Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback