Breaking News

6 மணி நேரமாக பெய்யும் மழை ...இப்போ விட்ற மாதிரி தெரியல...வெளுத்து வாங்கும் மழை!

அட்மின் மீடியா
0

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் மழை வெளுத்து வாங்கி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாலை முதலே வானம் மேக மூட்டமாகவே உள்ளது 



வரும் 5 நாட்கள் வட தமிழக மாவட்டங்களிலும் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது

கடந்த 6 மணி நேரமாக இடைவிடாமல் வருவதால் தண்ணீர் தேங்கியுள்ளதால் மேடு பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் அச்சத்துடனேயே சாலையை கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் சென்னை மீண்டும் வெள்ளக்காடாக மாறியது.தொடர் கனமழையால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் முதற்கட்டமாக 500 கனஅடி உபரி நீர் இன்று பிற்பகல் 1 மணிக்கு வெளியேற்றப்பட உள்ளது. 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், 

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், 

ஏனைய கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை

http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf

Tags: தமிழக செய்திகள்

Share this