Breaking News

டிரம்ப் ஆதரவாளர்களால் அமெரிக்க நாடாளுமன்றம் முற்றுகை வன்முறை பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு! நடந்தது என்ன

அட்மின் மீடியா
0

கடந்த நவம்பர் மாதம் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அதிக வாக்குகளை பெற்று அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வானார். ஆனால் இந்த வெற்றியை தற்போது அதிபராக உள்ள டிரம்ப் ஏற்க மறுத்து வருகிறார். 

 

ஜோ பைடன் தேர்தலில் முறைகேடு செய்து வென்றதாக டிரம்ப் குற்றச்சாட்டை முன்வைக்கிறார். இந்நிலையில் டிரம்பின் ஆதரவாளர்கள் தலைநகர் வாஷிங்டனில் மாபெரும் கண்டன பேரணிகளை நடத்தினர்.

அதேநேரத்தில் வாஷிங்டனில் உள்ள கேபிட்டல் கட்டடத்தில் காங்கிரஸின் கூட்டு கூட்டத்தில் செனட் உறுப்பினர்கள் ஒன்று கூடியிருந்தனர்.அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க நாடாளுமன்றம் இன்று கூடியது. 

அப்போது அங்கு திரண்ட ஆயிரக்கணக்கான ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள், ஜோ பைடனை அமெரிக்க அதிபராக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு எதிராக குரல் எழுப்பினர்.அப்போது அவர்களுக்கும் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.  

ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததால், அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனால் ஜோ பைடனை அதிபராக அறிவிக்கும் நிகழ்வு நிறுத்தப்பட்டு, துணை அதிபர் மைக் பென்ஸ் உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் அமெரிக்காவில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.

முற்றுகையிட்டவர்களை வெளியேற்ற காவல்துறையினர் துப்பாக்கிச்சுடு நடத்தினர். இதில் ஒரு பெண் உயிரிழந்தார். 

இந்நிலையில் மேலும் 3 பேர் தள்ளுமுள்ளுவில் ஏற்பட்ட காயத்தால் இறந்துள்ளனர். அமெரிக்க வன்முறைக்கு சர்வதேச தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் டிரம்பின் டுவிட்டர் ,பேஸ்புக் இன்ஸ்டாகிராம் ஆகிய கணக்குகளும்  முடக்கப்பட்டுள்ளது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback