Breaking News

ஆப் மூலம் கடன் கொடுத்து கந்து வட்டி வசூலித்த 2 சீனர்கள் உடபட் 4 பேர் கைது

அட்மின் மீடியா
0
ஆன்லைனில் கடன் பெற்று பலர் அடுத்தடுத்து உயிரிழந்து வரும் நிலையில், சீனாவைச் சேர்ந்தவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
 


சென்னை வேங்கைவாசலை சேர்ந்த கணேசன் என்பவர் கொரோனா பாதிப்பு காலகட்டத்தில் வேலை வாய்ப்பு இல்லாமல் பணத்தேவைக்காக செல்போனில் ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் கடன் வாங்கியிருக்கிறார். ரூ.5 ஆயிரம் கடனுக்கு வாரம் ரூ.1,500 வட்டி வசூலித்துள்ளனர்.  மேலும் தனது செல்போனில் உள்ள நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அவர்கள் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியதாகவும் அதிக வட்டி வசூலித்து வரும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் கொடுத்தார்.

இது தொடர்பாக விசாரனை செய்த மத்திய குற்றபிரிவு போலிஸார் அந்த எண்கள் பெங்களூரில் இஅயங்குவதை கண்டு பிடித்து  பெங்களூர் சென்று விசாரணை செய்ததில் அங்கு தனியாக கால்சென்டர் வைத்து பல்வேறு பெயர்களில் ஆன்லைன் உடனடி லோன் ஆப்கள் மூலம் சுமார் 2 லட்சம் பேருக்கு குறுகிய காலத்திற்கு அதிக வட்டிக்கு கடன் கொடுத்துள்ளனர். 
 
கடனை கொடுத்து விட்டு ஒரு வாரத்திற்குள் திரும்ப கட்டாதவர்களை தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளனர்.

தொடர் விசாரணையில், சீனாவைச் சேர்ந்த ஜியா யமாவ்(38), யுவான் லூன்(28) ஆகியோர் தான் கடன் செயலிகளுக்கு உண்மையான உரிமையாளர்கள் என்பதும், பெங்களூரைச் சேர்ந்த பிரமோதா மற்றும் பவான் ஆகியோரை பயன்படுத்தி இந்தியாவில் நிறுவனங்களை நடத்தி வருவதும் தெரியவந்தது. 
 
சீனாவை சேர்ந்த ஜியா யமாவ், யுவான் லூன் மற்றும் பிரமோதா, பவான் ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து நிறுவன ஆவணங்கள், லேப்டாப்கள், செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.

கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், சீனாவில் உள்ள ஹாங் என்ற நபர்தான் இதுபோன்ற பல நிறுவனங்களை இந்தியாவில் நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது. கைதான 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என அவர் தெரிவித்தார்
 
 

  ஆன்லைன் உடனடி லோன் ஆப் மோசடி - இரண்டு சீன நாட்டவர் உட்பட நால்வர் கைது(02.01.2021).

Online Instant Loan App Fraud - Four arrested, including two Chinese nationals by Chit and Kanthuvatti Prevention Unit, CCB (02.01.2021).https://t.co/QGiyLavH4o#chennaicitypolice#chennaipolice pic.twitter.com/qQpaNEHIZs

 

https://www.facebook.com/Chennai.Police/posts/3614775511942446

Tags: தமிழக செய்திகள்

Share this