FACT CHECK: ஊட்டி மலை ரயில் பற்றி நிர்மலா சீதாராமன் பெயரில் பரவும் பொய் செய்தி? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் புதிய தலைமுறை நியூஸ்கார்டு ஒன்றில் ஊட்டி ரயில் சர்வதேச தரத்தில் மாற்றப்பட்டுள்ளது. அதில் பயணம் செய்ய 3000 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்க முடியாதவர்கள் ஊட்டி செல்ல ஏன் ஆசைப்பட வேண்டும்?- மத்திய அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் என்று உள்ள ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
அந்த செய்தியில் 2 பொய் தகவல்கள் உள்ளது
1. புதிய தலைமுறை செய்தி நிறுவனம் இதுபோல் ஒரு செய்தி வெளியிடவில்லை
2. ஊட்டி மலை ரயில் டிக்கெட் ரூ.3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது; தனியார் மயமாக்கப்பட்டுள்ளது, என்பதும் பொய்யான தகவல்
ஊட்டி மலை ரயில் தனியார் மயமாக்கவில்லை என்று ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்தோம் அதனை படிக்க
அதே போல் புதிய தலைமுறை செய்தியும் பொய்யானது என அவர்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் மறுப்பு வெளிட்டுள்ளார்கள்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
இந்த புகைப்பட செய்தி போலியானது; புதிய தலைமுறை வெளியிட்டது அல்ல#Fake pic.twitter.com/Kb2d3XrbTr
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) December 9, 2020
Tags: FACT CHECK மறுப்பு செய்தி