Breaking News

FACT CHECK: மோடி இளமைப் பருவத்தில் யோகா செய்யும் அரிய வீடியோ என்று பரவும் வீடியோவின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  இளமைப் பருவத்தில் மோடி யோகா செய்யும் அரிய வீடியோ, என்று  ஒரு வீடியோவை  ஷேர் செய்து  வருகின்றார்கள். 





அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ளவர் நம் பாரதபிரதமர் மோடி அவர்கள் இல்லை

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ளவர் Krishnamacharya Yoga Mandiram என்ற யோகா அமைப்பின் நிறுவனர் கிருஷ்ணமாச்சார்யா மற்றும் பிகேஎஸ் ஐயங்கார், ஆவார்


அவர்கள் இருவரும் யோகாசனங்களை செய்வதில் கை தேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது மேலும் அவர்கள் இளமை பருவத்தில் செய்த அந்த வீடியோவை Krishnamacharya Yoga Mandiram  அவர்கள் தங்கள் அதிகார பூர்வ யூடியூப் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்கள்


இந்த வீடியோவின் தொடக்கத்தில் பிகேஎஸ் ஐயங்கார் யோகா செய்யும் காட்சிகளை எடுத்து நம் பாரத பிரதமர்  நரேந்திர மோடி எனக் கூறி தற்போது வதந்தி பரப்பி வருகிறார்கள் மேலும் பிகேஎஸ் ஐயங்கார் தற்போது உயிருடன் இல்லை


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.youtube.com/watch?v=EcQI5BZ3Xys&feature=emb_title



 

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback