FACT CHECK: தி.மு.க இந்தமுறை முஸ்லீம்களுக்கு 30 சீட் கொடுக்கவேண்டும் என ஜமாஅத்துல் உலமா சபை அறிவித்ததா? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
சமூக வலைதளங்களில் குமுதம் ரிப்போர்ட்டர் தன் பேஸ்புக் பக்கத்தில் திமுக இந்த முறை குறைந்தது 30 சீட்டுகளை முஸ்லீம் வேட்பளர்களுக்கு கொடுக்கவேண்டும். இல்லை என்றால் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லீமின் கட்சியை (ஏஐஎம்ஐஎம்) ஆதரிப்போம் என ஜமா அத்துல் உலமா சபை அறிவித்த்தாக ஒரு செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
ஜமா அத்துல் உலமா சபை அது போல் ஒரு அறிவிப்பை அதிகாரபூர்வமாக இது வரை அறிவிக்கவில்லை
மேலும் குமுதம் ரிப்போர்ட்டர் செய்தி பொயானது எனவும் அதற்க்கு மறுப்பு செய்தியும் ஜமா அத்துல் உலமா சபை அறிவித்துள்ளது
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி