#BREAKING: புதுச்சேரியில் ஜனவரி 4-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு
அட்மின் மீடியா
0
#BREAKING | புதுச்சேரியில் ஜனவரி 4-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் கமலக்கண்ணன் அறிவிப்பு
புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கமலகண்ணன் வருகின்ற 4-ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்படும் எனவும் விருப்பமுள்ளவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகுப்புகள் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும் என அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.
மேலும், ஜனவரி 18-ம் தேதி முதல் பள்ளிகள் முழுமையாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அப்போது, மாலை வரை வகுப்புகள் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
Tags: இந்திய செய்திகள்