Breaking News

அங்கிகரிக்கப்படாத ஆன்லைன் செயலிகள் மூலம் கடன் வாங்க வேண்டாம்: புகார் அளியுங்கள்: ரிசர்வ் வங்கி

அட்மின் மீடியா
0

அங்கீகாரம் இல்லாத ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் கடன் வாங்க கூடாது.அங்கீகாரம் இல்லாத ஆன்லைன் கடன் சேவைகளில் கடன் பெறுவது மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும், அங்கீகாரம் இல்லாத கடன் செயலிகள் மீது பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

 


 

 அங்கீகாரமற்ற கடன் செயலிகள் மூலம் கடன் பெற்று பலர் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக தகவல்கள் வருகிறது. 

அங்கீகாரமற்ற லோன் ஆப் மூலம் கடன் பெற வேண்டாம். அங்கீகாரமற்ற ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் கடன் வாங்குவது சட்டத்திற்கு புறம்பானது. 

அங்கீகாரமற்ற ஆன்லைன் கடன் செயலிகள் மீது பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், பல அங்கிகரிக்கப்படாத செயலிகளில் பதிவேற்றப்படும் வாடிக்கையாளர்களின் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுகின்றது.

இதுபோன்ற தவறுகளை தடுக்க, ரிசர்வ் வங்கியிடம் முறையான அனுமதி பெற்று இயங்கும் செயலிகளில் மட்டுமே கடன் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

  

ஆன்லைன் மூலம் புகார் அளிக்க:

 https://sachet.rbi.org.in/

  

ரிசர்வ்  வங்கி வெளியிட்ட அறிக்கை:

 

 https://www.rbi.org.in/Scripts/BS_PressReleaseDisplay.aspx?prid=50846

Tags: தமிழக செய்திகள்

Share this