நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் கம்பிகள் பொருத்த தடை- காரணம் இதுதான்!
தற்போது நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் கம்பிகள் பொருத்த தடை- காரணம் இதுதான்!
பொதுவாக வாகனங்களில் விபத்தின்போது வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்ப்பதற்காக வாகனங்களின் உரிமையாளர்களால் பம்பர் பொருத்தப்படுகிறது.
ஆனால் வாகனங்கள் விற்கப்படும்போது இதுபோன்ற பம்பர்கள் பொருத்தப் படுவதில்லை. வாகன உரிமையாளர்கள் தங்களின் தேவைகளுக்காக இந்த பம்பர்களை மாட்டிக்கொள்கின்றனர்.
இந்த வகையான பம்பர்களை மாட்டிக்கொள்வதால் வாகனம் சேதமடைவதை ஓரளவு தவிர்க்க முடியும். ஆனால் அதன் அதிர்வுகளை ஏர்பேக் சென்சாருக்கு அனுப்பாமல், பம்பர் தாங்குகிறது. இதனால் ஏர்பேக் வேலைசெய்யமல், விபத்துகளின்போது ஏர்பேக் வேலைசெய்வதை தடுக்கிறது. இதனால் விபத்துகளின்போது உயிர் சேதங்கள் அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன்காரணமாக பம்பர்களை அகற்ற வேண்டும் எனவும், மீறி பம்பர்களை பொருத்தினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்