சவூதியை தொடர்ந்து சர்வதேச விமான போக்குவரத்திற்கு தற்காலிக தடை விதித்தது ஓமான்..!!
அட்மின் மீடியா
0
ஐரோப்பிய நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதன் காரணமாக பல நாடுகள் பிரிட்டன் உடனான சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைக்கு தற்காலிக தடை விதித்துள்ளன.
சவூதி அரேபியா நாடானது இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு ஒரு வாரம் தடை விதித்துள்ளது. அத்துடன் மற்ற நாடுகளுடனான தரை வழி மற்றும் கடல்வழி போக்குவரத்து சேவைக்கும் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் அதே போல் ஓமான் நாடும் தனது தரை, கடல் மற்றும் வான் வழி போக்குவரத்திற்கு தற்காலிக தடை விதிப்பதாக தற்பொழுது அறிவித்துள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்