Breaking News

மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல நாளை முதல் அனுமதி

அட்மின் மீடியா
0

கொரோனா ஊரடங்கு காரணமாக கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. 

சென்னை மெரினா கடற்கரைக்கு பொது மக்கள் செல்லவும்  அனுமதிக்கப்படவில்லை.



இந்நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கடந்த மாதம் 30-ந் தேதி வெளியிட்ட அறிக்கையில், 'நோய்த்தொற்றின் நிலவரத்துக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 14-ந் தேதி(நாளை) முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்' என்று அறிவித்திருந்தார். 


அதன்படி, 8 மாதங்களுக்கு பிறகு சென்னை மெரினா உள்பட கடற்கரைகளில் பொதுமக்கள் செல்வதற்கு நாளை அனுமதி அளிக்கப்பட உள்ளது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback