ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த மத்தியஅரசு!
அட்மின் மீடியா
0
ஆன்லைன் ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களுக்கு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் புதிய கட்டுப்படுகளை விதித்துள்ளது.
அதன்படி
- ஆன்லைன் மூலம் 18 வயதுக்கும் குறைவானவர்கள் பணம் சம்பாதிக்க முடியும் என விளம்பரம் படுத்தக்கூடாது
- ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளம்பரங்களை ஒளிபரப்பும் போது நிதி சார்ந்த அபாயம் இருக்கிறது என்ற வாசகம் ஒளிபரப்பு செய்யவேண்டும்.
- எந்த மொழியில் ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்கள் வெளியிடப்படுகிறதோ அதே மொழியில் எச்சரிக்கைகளும் வெளியிடவேண்டும்.
- ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் வருமானத்திற்கான வழி, என்றும் வேலைவாய்ப்புக்கான மாற்று எனவும் விளம்பரம் செய்யக்கூடாது.
- ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுபவர்களை வெற்றியாளர் போல சித்தரிக்க கூடாது.
எனவும் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் டிசம்பர் 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
Tags: இந்திய செய்திகள்