Breaking News

வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் தபால் மூலம் ஓட்டுபோடலாம் : மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை

அட்மின் மீடியா
0

அடுத்த ஆண்டு தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெளிநாடுவாழ் இந்தியர்களை தபாலில் வாக்களிக்க அனுமதிக்கலாம் என மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.




எப்படி வாக்களிப்பது:

இந்திய தூதரகத்தின் பரிந்துரையின்பேரில் வெளிநாடுவாழ் இந்தியரின் சொந்த ஊரை சேர்ந்த தேர்தல் அதிகாரி அவருக்கு இ-மெயில் வாயிலாக வாக்குச் சீட்டை அனுப்பி வைப்பார். 

அந்த வாக்குச் சீட்டை பதிவிறக்கம் செய்து வாக்கை பதிவு செய்யவேண்டும். 

இந்திய தூதரகத்தின் சான்றுடன் தபால் வாக்கு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும்.

சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிக்கு தபால் வாக்கு வந்து சேரும். 

அதன்பிறகு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு தபால் வாக்கு அனுப்பி வைக்கப்படும்.


இந்தியவை சேர்ந்த பலர் வெளிநாடுகளில் பல்வேறு பணிகளில் பணியாற்றி வருகின்றனர். இந்த முறை அமலுக்கு வந்தால் இனி அவர்களும் வாக்களிக்கலாம்

source:

https://www.hindustantimes.com/india-news/ec-proposes-postal-ballot-for-nris-asks-government-to-amend-law-at-earliest/story-RdBYMVsHLlalkSKJlSRHVP.html

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback