Breaking News

FACT CHECK: ரமலான் செய்தியை ஷேர் செய்த சொர்க்கமா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0

இன்ஷா அல்லாஹ் வரவிருக்கும் 15.03.2020 தேதிக்கு  புனித ரமலான் மாதம்  ஆரம்பமாகிரது. கண்மணி நாயகம் முஹம்மது முஸ்தபா கூரினார்கள் யார் ஒருவர் ரமலானை பற்றிய செய்தியை பிறருக்கு முதலில்  கூருவாரோ அவருக்கு நரகம் ஹராமாகிவிடும் நான் உங்கலுக்கு கூறியது போல் நீங்களும் இச்செய்தியை பிரருக்கு       பகிர்ந்து நரக நெருப்பை ஹராம் ஆக்கிக்கொல்லுங்கள்  இன்ஷா அல்லாஹ்
மேலே உள்ள இந்த செய்தி வருடா வருடம் பலராலும்  ஷேர் செய்யபடுகின்றது

காலண்டரில் போடுவதை நாம் நம்பவேண்டுமா

பிறை பார்த்து நோன்பு வைக்கவேண்டுமா

நீங்கள் சொன்ன தினத்தில் பிறை தெரியவில்லை என்றால் என்ன  செய்வீர்கள்

அடுத்த விநாடி என்ன நடக்கபோகுது என்று அறிபவன் அல்லாஹ் மட்டுமே

இது போல் நம் புனித குர்ஆனில் கூறப்படவில்லை

இது போல் ஹதீஸ்களில் கூறப்படவில்லை

நமது நபி ஸல் அவர்கள் தான் கூறி உள்ளார்களா

இல்லையே பிறகு ஏன் இது போன்ற பொய்யான செய்திகளை பரப்புகிறோம்

இந்த செய்தி்யை நான் பரப்பிவிட்டால் எனக்கு சொர்க்கம் கிடைத்துவிடுமா

அப்படியென்றால் வாழ்நாள் முழுவதும் தொழுகை,நோன்பு, ஹஜ் மற்றும் இன்ன பிற நல் அமல்கள் எதற்கு

நாம் சிந்திக்க வேண்டாமாஇது போல் பொய்யான செய்திகளை பரப்புகிறவர்கள் பற்றி குர்ஆன் கூறுவதாவது

இப்புவியிலிருப்பவர்களில் பலர் (இவ்வாறே) இருக்கின்றனர் நீங்கள் அவர்களைப் பின்பற்றுவீரானால் அவர்கள் உங்களை அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து திருப்பி விடுவார்கள்* (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத் தவிர (உண்மையை) அவர்கள் பின்பற்றுவதில்லை. அன்றி, (வெறும் பொய்யான) கற்பனையில்தான் அவர்கள் மூழ்கியிருக்கின்றனர்

அல்குர்ஆன் : 6:116

சொர்க்கவாசிகளை அல்லாஹ் தான் அறிவான் நமது அமல்களை ஒப்புகொள்வது அவன் பொருப்பில் உள்ளது.மேலும் அல்லாஹ்வே கூலி கொடுப்பவனும் தீர்ப்பு செய்பவனாவான்.

எனவே இது போன்று மார்க்கத்தின் பேரில் பொய்யை பரப்பி மறுமையில் நஷ்டத்தை ஏற்படுத்தி கொள்ளாதீர்கள்

உங்கள் நாவில் வந்தவாறெல்லாம் பொய் கூறுவதைப்போல் (எதைப் பற்றியும் மார்க்கத்தில்) இது ஆகும்; இது ஆகாது என்று கூறாதீர்கள். (அவ்வாறு கூறினால் அல்லாஹ்வின் மீது அபாண்டமாகப் பொய் கூறுவது போலாகும்.) எவர்கள் அல்லாஹ்வின் மீதே பொய்யைக் கற்பனை செய்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக வெற்றி அடையவே மாட்டார்கள்.

அல்குர்ஆன் : 16:116

இஸ்லாத்தில் சொல்லாத இதுப்போல பொய் பிரச்சாரங்களை செய்வதில் நமக்கு கேடுதான்.

கேள்விப்பட்டதை பரப்புபவன் பொய்யன் என நபிமொழி உள்ளதே அதை மறந்து நமது சகோதரர்கள் இப்படி பொய்யை பரப்புகிறார்களே அது ஏன்

சிந்திக்க வேண்டாமா

நான் சொல்லாத ஒன்றை என் மீது யார் இட்டுக்கட்டிக் கூறுகிறானோ அவன் தனது தங்குமிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

புகாரி ஹதீஸ் 31

எனவே மார்க்கத்தின் பெயரால் வரும் சந்தேக செய்திகளை ஆராய்ந்து பகிருங்கள்*

இல்லையேல் விட்டு விடுங்கள். பாவத்தில்சிக்காமல் இருக்கலாம்


Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Share this