Breaking News

நீலகிரி மலை ரயில் தனியாருக்கு தாரைவார்ப்பா? பயண கட்டணம் 3,000 ரூபாயா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0

கோவை, மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினமும் நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலில் பயணிக்க உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாது, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். கரோனா பாதிப்பு காரணமாக 8 மாதங்களாக இந்தச் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரியில் இயக்கப்பட்டு வரும் மலை ரயில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது இதுவரை ஒரு நபருக்கு  30 ரூபாயாக இருந்த பயண கட்டணம் இனி ஒரு நபருக்கு 3000 ரூபாய் என வும் பலர் ஒரு செய்தியினை சமூக வலைத்தளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்


உண்மை என்ன?


காரமடையைச் சேர்ந்த தனியார் ஓட்டல் நிறுவனம், தங்கள் நிறுவன ஸ்டிக்கரை ஒட்டி மலை ரயிலை இயக்கியது. இதில் பயணிக்க ஒருமுறை பயணக் கட்டணமாக ரூ.3 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த ரயிலை இயக்கத் தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டதாகப் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

ஆனால் ரயில்வே துறையின் விதிகளின்படி எந்த ஒரு தனி நபரும் ஒரு ரெயிலையோ ஒரு இரயில் பெட்டியை full tariff rate (FTR ) என்ற அடிப்படையில் ஒரு குழுவிற்கோ, சுற்றுலா அல்லது திருமண நிகழ்ச்சிகாக பணம் செலுத்தினால் ரயில்வே துறை அவர்களுக்கு ஒரு ரெயிலை அல்லது ஒரு இரயில் பெட்டியை இயக்கும். இது chartered trip என்று அழைக்கப்படுகிறது. 


அந்த அடிப்படையிலேயே டிசம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் ஒரு தனியார் நிறுவனத்தின் விண்ணப்பத்தின்படி இயக்கப்பட்டது. இதற்காக அந்த நிறுவனத்திடமிருந்து வைப்புத்தொகை, வாடகைக் கட்டணம் பெறப்பட்டுள்ளது. 


மேலும் ரயில்வே வெறும் ரயிலை மட்டுமே அவர்களுக்கு அளிக்கிறது. அதில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் டீ, காபி, ஸ்நாக்ஸ் போன்றவற்றை வாடகைக்கு எடுக்கும் தனியார் நிறுவனமே அளிக்கிறது.அதற்கேற்ப கட்டணத்தை நிர்ணயித்து தனியார் நிறுவனம் பயணிகளை அழைத்துச் சென்றுள்ளது. ரயில்வேவுக்கும், பயணக் கட்டணத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 


மேலும் இதற்கு முன்பும் இதேபோன்று பிறந்த தாள் கொண்டாட்டம், திருமண நிகழ்ச்சி போன்றவற்றுக்குச் செல்ல நாள் வாடகைக்கு ரயில்கள் வழங்கப்பட்டுள்ளன. 


இதற்கு முன்பு கடந்த 2018-ம் ஆண்டு ஐரோப்பாவைச் சேர்ந்த தம்பதியினர் ரூ.3 லட்சம் செலுத்தி தாங்கள் இருவர் மட்டும் பயணிக்க மலை ரயிலை வாடகைக்கு எடுத்தனர். 


2019 டிசம்பரில் 71 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்காக மட்டும் இதேபோல வாடகைக்கு ரயில் இயக்கப்பட்டது


இதன் உண்மை தன்மை புரியாமல் பலர்  ஊட்டி மலை ரயில் தனியார் மயமாக்கப்பட்டு விட்டது என சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றார்கள்



ரயில்வேயின் வழக்கமான மலை ரயில் சேவைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீலகிரி மலை இரயில் தனியார் வசமானது என்பது தவறான புரிதல்


இரயில்வேயின் வழக்கமான சேவைகள் கோவிட்-19 ஐ கருத்தில் கொண்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்க பட்டு உள்ளது. ரயில்வே வாரியம் அனுமதி அளித்த பிறகு, பழைய கட்டணத்துடன் வழக்கம்போல மீண்டும் மலை ரயில் இயக்கப்படும். என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துளளார்


இந் நிலையில் இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை 



source:

https://www.hindutamil.in/news/tamilnadu/609167-nilgiri-mountain-rail-leased-to-a-private-company.html


https://simplicity.in/coimbatore/english/news/74291/Private-travel-agency-rents-Nilgiris-Mountain-Rail-for-a-week


https://timesofindia.indiatimes.com/city/coimbatore/charter-service-breaks-eight-month-hiatus-of-nilgiri-mountain-railway/articleshow/79585211.cms

Tags: FACT CHECK

Give Us Your Feedback