Breaking News

டிச.,21-ல் வானில் 800 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் தோன்றும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் அரிய நிகழ்வு

அட்மின் மீடியா
0

800 ஆண்டுகளுக்குப்பின் கிறிஸ்துமஸ் நட்சத்திரம்800 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வானில் தோன்றும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் வரும் டிசம்பர் 21-ல் தோன்றும்

 


சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய இரண்டு கிரகங்களாக உள்ளது வியாழன் மற்றும் சனி. இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றுடன் ஒன்று நெருங்கும் போது பெரிய நட்சத்திரம் போல ஒளி தோன்றும். இது கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என கூறப்படுகிறது

வியாழன் கிரகத்திற்கும் சனி கிரகத்திற்கு இடையே கிட்டத்ட்ட மில்லியன் மைல் கணக்கில் இடைவெளி உள்ளது. இவை இரண்டு கோள்களும் பூமியின் பார்வையில் அருகருகே தோன்றும் என்பது அரிய நிகழ்வு தான் இது

800 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தெரியும் இந்த நட்சத்திரம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி ஏற்பட உள்ளதாக வானியல் ஆய்வாளர் கணித்துள்ளனர். 

மேலும் அந்த நாள் நீண்ட இரவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர் வியாழனும் சனியும் 20 வருடத்திற்கு ஒரு முறை சந்திக்கும் என்றாலும் இந்த நட்சத்திரம் 800 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே தெரியும்

எதிர் வரும் வரும் டிசம்பர் 20ஆம் தேதி சூரியன் மறைவானதும் இந்த கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தோன்றி 22ஆம் தேதி வரையும் இருக்கும் எனவும் 21ஆம் தேதி இரவு மிக பிரகாசமாக இருக்கும் என்றும்  இந்த நட்சத்திரத்தை டெலஸ்கோப் மற்றும் பைனாகுலர் போன்ற கருவிகளுடன் எந்த பகுதியில் இருந்தும் பார்க்கலாம் என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback