15 வாகனங்கள் மோதிய லாரி... வெளியான பதறவைக்கு சி.சி.டி.வி வீடியோ காட்சி!
தர்மபுரி அருகே, 15 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட பயங்கர விபத்தில், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் சரக்கு லாரியால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
கண்டெய்னர் லாரி பலமாக மோதியதில் ஒவ்வொரு வாகனமும் அதற்கு முன்னால் சென்ற மற்ற வாகனங்களின் மீது தாறுமாறாக மோதி பெரும் விபத்து உண்டானது.
மொத்தம் 12 கார்கள், 2 டாரஸ் லாரிகள், ஒரு வேன் என மொத்தம் 15 வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்றாக ஏறிக்கொண்டு நின்றன. இந்தப் பயங்கர விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்நிலையில், தற்பொழுது இந்த விபத்து தொடர்பான பதறவைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
தொப்பூர் விபத்து பதற வைக்கும் காட்சி @sunnewstamil pic.twitter.com/N5qRlqqmPJ
— மு.குணசேகரன் Gunasekaran (@GunasekaranMu) December 12, 2020
Tags: வைரல் வீடியோ