FACT CHECK: மாமிசம் உண்பவர்கள் ஓட்டு பாஜகவுக்கு தேவையில்லை என்று எச்.ராஜா கூறினாரா?உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் மாமிசம் சாப்பிடுபவர்கள் வாக்கு பாரதிய ஜனதா கட்சிக்குத் தேவையில்லை என்று கார்டை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
தற்போதைய டிஜிட்டல் உலகில் ஒரு நிமிடத்தில் ஒரு செய்தியினை வைரல் ஆக்குகின்றார்கள் அந்த செய்தி உண்மையா பொய்யா என கூட ஆராய்வது இல்லை
அது போல் சிலர் முன்னணி செய்தி ஊடகங்களின் நியூஸ் கார்டை பொய்யான செய்தியுடன் எடிட் செய்து சமூக ஊடகங்களில் தொடர்ந்து ஷேர் செய்கின்றார்கள்
மேலும் தற்போதைய டிஜிட்டல் உலகில் உண்மை எது போலி எது என்று கூட தெரிய வில்லை உண்மையில் நியூஸ் 7 தொலைகாட்சி 17.11.2020 அன்று விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் ஹெச்.ராஜா பேச்சு! “கணாநிதியின் மனைவி தயாளு அம்மையாரும், ஸ்டாலின் மனைவி துர்காவும் தைரியசாலிகள்; ஆன்மிகத்தை கடைப்பிடிக்கும் அவர்கள்தான் பெண் சிங்கங்கள்!” என்று கூறியதாக செய்தி வெளியிட்டு இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்து தவறான தகவல் சேர்த்து வெளியிட்டிருக்கின்றார்கள்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
#JUSTIN
— News7 Tamil (@news7tamil) November 17, 2020
கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையாரும், ஸ்டாலின் மனைவி துர்காவும் பெண் சிங்கங்கள்: ஹெச்.ராஜாhttps://t.co/5wMBD3FLqB | @BJP4TamilNadu | @mkstalin | @HRajaBJP pic.twitter.com/9iEeanPUxB
Tags: FACT CHECK மறுப்பு செய்தி