FACT CHECK: டெல்லி ஐஐடி-யைச் சேர்ந்தவர்கள் முட்டை செடியைக் கண்டுபிடித்தார்களா ?உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் டெல்லி ஐஐடி-யைச் சேர்ந்தவர்கள் செடியில் விளையும் முட்டையைக்கண்டுபிடித்துள்ளார்கள் இது சைவ முட்டை என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
டெல்லி ஐஐடி-யைச் சேர்ந்த மாணவர்கள் சைவ முட்டை கண்டுபிடித்தது உண்மைதான் ஆனால் அது செடியில் விளையும் முட்டை இல்லை
மேலும் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ எடிட் செய்யப்ட்டது அதில் காண்பிக்கபடும் செடியில் உள்ளது முட்டை இல்லை, அது வெள்ளை கத்தரிக்காய்
மேலும் ஐஐடி-யைச் சேர்ந்த மாணவர்கள் கண்டு பிடித்த சைவ முட்டை வீடியோ கீழே
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: மறுப்பு செய்தி FACT CHECK