Breaking News

FACT CHECK: கூகுள் மற்றும் யூடியூபை 3 நாட்களுக்கு உபயோகிக்காதீர்கள் என மார்க்க அறிஞர்கள் கூறினார்களா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  கூகுள் மற்றும் யூடியூப் சேனலில் முஹம்மது நபி அவர்களை அவமதிக்கும் வகையில் 74 நிமிட இஸ்லாமிய எதிர்ப்பு திரைப்படம் ஒன்றை வெளியிடுகிறதுஇதற்காக பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.100 க்கும் மேலான முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

எனவே இன்று மற்றும் 3 நாட்களுக்கு கூகுள் மற்றும் யூடியூப் பயன்படுத்த வேண்டாம் என்று  அனைத்து முஸ்லிம்களுக்கும்  இஸ்லாமிய அறிஞர்கள் எச்சரிக்கை  விடுத்துள்ளார்கள்.என்று  ஒரு பதிவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 






அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்.


அப்படியானால் உண்மை என்ன?


அன்பான அட்மின் மீடியாவின் வாசகர்களுக்கு  ஒரு அன்பான வேண்டுகோள்.

முதலில் இது போன்ற செய்திகளை நாம் படிக்கும் போது உணர்ச்சி வசப்பட்டு பலருக்கும் ஃபார்வர்டு செய்து விடக் கூடாது.

மாறாக சில நிமிடங்கள் யோசிக்க வேண்டும். இந்த தகவல் உண்மையாக இருக்குமா?

அப்படி உண்மையாக இருந்தால் உலகம் முழுவதும் ஒரு பெரிய போராட்டம் நடந்திருக்கும்.

உதாரணத்திற்கு பல நிகழ்வுகள் இருக்கிறது.

ஏனென்றால் இஸ்லாமிய மக்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி அவர்களை பற்றி தவறான முறையில் அது பேசுவதின் மூலம் அல்லது புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் எந்த முறையில் இருந்தாலும் அந்த தவறை செய்தவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக முழு உலகத்திலும் போராட்டங்கள் நடைபெறும்.

 ஆனால் அப்படி எந்த தகவலும் இதுவரை தெரியவில்லையே.

சரி அப்படியே கூகுள் மற்றும் யூடியூபை பயன் படுத்தாமல் இருந்தால் அது எப்படி அவனுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும்.

இதற்கு பிறகு இது போன்ற வீடியோக்கள் அதில் வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback