Breaking News

வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை ஏன் தடை செய்யக் கூடாது?- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

அட்மின் மீடியா
0

குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் பலர் வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை, காவல்துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக பயன்படுத்துகின்றனர். இதனைத் தடுக்க வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை ஏன் தடை செய்யக் கூடாது? என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

 


மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர்  உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்  பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்

மதுரையில் 50 சதவீத வாகனங்களில் வழக்கறிஞர் அடையாளச் ஸ்டிக்கர்களை ஒட்டிகொண்டுள்ளார்கள் அவர்கள் காவல்துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்கு வாய்ப்பாக அமைகிறது. மேலும் சிலர் சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என கூறுகின்றனர்.

எனவே 2019 விதிகளின்படி பார் கவுன்சில் அனுமதி வழங்கிய  வழக்கறிஞர்களுக்கு மட்டும், ஸ்டிக்கர்களை வழங்க வேண்டும். மேலும் அனுமதி இல்லாமல் வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியிருந்தார்.

அந்த மனு இன்று விசாரனைக்கு வந்தது அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி  அமர்வு,  குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் பலர் வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை, காவல்துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக பயன்படுத்துகின்றனர். இதனைத் தடுக்க வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை ஏன் தடை செய்யக் கூடாது? என கேள்வி எழுப்பினர்.

மேலும்  இது குறித்து தமிழக காவல்துறை தலைவர், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணை வேந்தர், அரசு சட்டக்கல்லூரி முதல்வர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags: தமிழக செய்திகள்

Share this