இனி கொடைக்கானலை ஹெலிகாப்டர் மூலம் சுற்றிப்பார்க்கலாம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக, தனியார் நிறுவனம் ஒன்று ஹெலிகாப்டர் மூலம் சுற்றிப்பார்க்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
கோப்பு படம்
மத்திய அரசின் அனுமதியுடன் தனியார் நிறுவனம் ஒன்று இந்த சுற்றுலா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
முதல்கட்டமாக 2ம் தேதிமுதல் 4 ம்தேதி வரை (திங்கள் ,செவ்வாய், மற்றும் புதன் கிழமை) ஆகிய 3 நாட்கள் வரை இந்த ஹெலிகாப்டர் சுற்றுலா நடைபெற உள்ளது.
ஹெலிகாப்டரில் கொடைகானல் அழகை பார்த்து ரசிக்க தனி நபர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
எனவே நாளை முதல் கொடைக்கானல் நகரில் உள்ள தனியார் மைதானத்தில் இருந்து ஹெலிகாப்டர் பறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
Tags: தமிழக செய்திகள்