Breaking News

#BREAKING :இன்று இரவு அல்லது நாளை அதிகாலையில் நிவர் புயல் கரையை கடக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

அட்மின் மீடியா
0

வங்கக் கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும்.என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது




தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிவர் புயல் இன்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Cyclone Nivar: சென்னை அருகே நிவர் புயல் ! இப்போது எவ்வளவு தூரம்? எவ்வளவு வேகத்தில் வருகிறது? நிவர் புயல் இப்ப எங்க இருக்கு நேரடி சாட்டிலைட் லைவ்  காண....

https://www.adminmedia.in/2020/11/blog-post_90.html


நிவர் புயல் தற்போது மணிக்கு 7 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் தற்போது   கடலூரில் இருந்து 290 கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு 300 கிமீ, சென்னைக்கு 350 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.என்றும்

புயல் இன்னும் 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.அதனைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை புயல் கரையை கடக்கும் என்றும், கரையை கடக்கும் போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback