பீகாரில் பாஜக - நிதீஷ்குமார் கூட்டணி தொடர்ந்து முண்ணனி
அட்மின் மீடியா
0
பீகார் மாநிலத்தில் பாஜக - நிதீஷ்குமார் கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 122 இடங்களை கடந்து தொடர்ந்து முன்னிலை வகிப்பதால் இந்த கூட்டணி ஆட்சியை பிடிப்பது உறுதியாகிவிட்டது.
பீகாரில் மொத்தம் 243 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
பீகாரில் ஆட்சி அமைக்க 122 தொகுதிகள் பெரும்பான்மை தேவை
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதன் முதலே காங்கிரஸ் மற்றும் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆர்.ஜே.டி கட்சியின் மெகா கூட்டணி முன்னிலையில் இருந்தது.
ஆனால் திடீர் திருப்பமாக தற்போது நிதிஷ் குமாரின் ஜேடியு மற்றும் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
தற்போதைய நிலவரப்படி
பாஜக கூட்டணி 125 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
ஆர்.ஜே.டி கட்சியின் கூட்டணி 106 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
Tags: இந்திய செய்திகள்