ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு!
அட்மின் மீடியா
0
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்துள்ளார்.
ஆன்லைனில் ரம்மி சீட்டாட்ட விளையாட்டினால் பணம் இழந்தவர்கள் பலர் தற்கொலை செய்துவருகின்றார்கள்
ரம்மி விளையாட அழைக்கும் விதமான விளம்பரங்கள் சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒளிப்பரப்பாவதைப் பார்க்க முடியும்.
எனவே ஆன்லைன் ரம்மியை தடை செய்யவேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞர் முகமதுரஸ்பி முறையீடு செய்துள்ளார். முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் உறுதி அளித்துள்ளனர்
Tags: தமிழக செய்திகள்