Breaking News

என் தந்தை தொடங்கியிருக்கும் அரசியல் கட்சிக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை

அட்மின் மீடியா
0
நடிகர் விஜய் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றி உள்ளதாகவும் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி ஆரம்பக்க உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது
 
அத்துடன் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியின் பெயரை, அகில இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் பரவின.இதை விஜய்யின் பிஆர்ஓ ரியாஸ் அகமது இந்த செய்தி பொய் என்று திட்டவட்டமாக மறுத்தார். 
 
இந்நிலையில் அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சிக்கு நான் தான் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளேன். இது என்னுடைய முயற்சி. இது விஜயின் அரசியல் கட்சி அல்ல என்று எஸ்ஏ சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார்.
 
 
அதற்க்கு அடுத்து நடிகர் வெளியிட்ட அதிரடி அறிக்கையில்:
 
என் தந்தை தொடங்கியிருக்கும் அரசியல் கட்சிக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை

என் தந்தை கட்சி தொடங்கியிருக்கிறார் என்பதற்காக எனது ரசிகர்கள் அக்கட்சியில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்

 


தந்தை தொடங்கியிருக்கும் கட்சிக்கும் எனது இயக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என் பெயரையோ, புகைப்படத்தையோ எனது இயக்கத்தையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்

 

எனது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் - விஜய் பரபரப்பு அறிக்கை



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback