Breaking News

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் 5 ஆண்டு சிறை... கேரளாவில் புதிய சட்டம்..!

அட்மின் மீடியா
0

சமூக வலைதளங்களில் கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் அவதூறு பரப்பினால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் சட்டம் கேரளாவில் அமலுக்கு வரவுள்ளது. இந்த அவசரச் சட்டத்துக்கு கேரள ஆளுநர் முகமது ஆரிஃப் கான் ஒப்புதல் கொடுத்துள்ளார்.



இதன் மூலம் தனி நபரின் மரியாதை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டால் காவல்துறை நடவடிக்கை இனி பாயக்கூடும்.

கேரள போலீஸ் சட்டப் பிரிவு 118-ல் 118 ஏ என்ற பிரிவு புதிதாக இணைக்கப்பட்டு காவல்துறைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் கேரளாவில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில் உள்நோக்கத்துடன் சமுக வலைதளங்களில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினால், அல்லது அவதூறு தகவலை உண்மைத்தன்மை பற்றி ஆராயமல் பரப்பினால் உரிய நபர்கள் மீது இனி கைது நடவடிக்கை பாயும்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback