Breaking News

16 ம் தேதி மதரஸாக்கள் திறப்பு இல்லை:மஜ்லிசுல் மதாரிஸில் அரபிய்யா அறிவிப்பு

அட்மின் மீடியா
0
முக்கிய அறிவிப்பு

தமிழகத்தின் அனைத்து மதரஸாக்களின் முதல்வர், நிர்வாகிகள் உயர் சமுகம்... அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இப்பவும் கடந்த 2020 நவம்பர் மாதம் 1-ம் தேதி அன்று தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசாணையின் படி நவம்பர் 16-ம் தேதி தமிழகத்தின் அனைத்து சிறிய பெரிய மதரஸாக்களும் திறந்து கொள்ளுமாறும் 17-ம் தேதி பாடங்கள் ஆரம்பிக்குமாறும் மஜ்லிசுல் மதாரிஸில் அரபிய்யாவின் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 2020 நவம்பர் மாதம் 12-ம் தேதியன்று தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுகிறது என்றும் சூழ்நிலைக்கு ஏற்ப திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதால் மதரஸாக்களின் திறப்பம் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று மஜ்லிஸ் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறது
இன்ஷா அல்லாஹ் அரசின் மறுஅறிவிப்பு வந்ததற்குப் பின்னால் மதரஸாக்களின் திறப்பு குறித்த ஆலோசனைகளை மஜ்லிஸின் சார்பாக வழங்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். வஸ்ஸலாம்

Share this