Breaking News

FACT CHECK: திருமாவளன் அவர்கள் புகைபடத்தை போட்டோஷாப் செய்து வதந்தி ! யாரும் நம்பாதீர்கள்

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இளம்பெண் அருகே உள்ளாடையுடன் நிற்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில்  பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் அந்த புகைப்படம் போட்டோஷாப் மூலம் எடிட் செய்யபட்ட புகைப்படம் ஆகும்

அதாவது உள்ளாடை மட்டும் அணிந்து நிற்கும் ஆணின் தலையை மாற்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் புகைப்படத்தை வைத்து எடிட் செய்துள்ளனர். 


அந்த உண்மையான புகைப்படம் திருப்பூரில் பா.ஜ.க நிர்வாகி ஒருவர் ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு திருப்பூர் மாநகரில் உள்ள முக்கிய தொழில் அதிபர்களை வலையில் வீழ்த்தி அந்த பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும்போது வீடியோ எடுத்து பணம் பறிப்பதாக புகைப்படங்கள் மற்றும் ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த புகைபடத்தை வைத்து திருமாவளவன் என்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

அசல் புகைபடம் மற்றும் செய்தி

https://twitter.com/SSivakkrishnan/status/1145204898067124224/photo/1



Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback