Breaking News

FACT CHECK: மசாலா பாக்கெட்டில் ஆண்மைக் குறைவு மருந்து கலக்கப்படுவதாக வதந்தி! செய்தியின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  ஆச்சி மசாலா யாரும் வாங்க வேண்டாம் ஆண்மை குறைவு மருந்து கலக்கபடுகிறது… கையுடன் பிடித்த அதிகாரிகள்… கீலே உள்ளவர்கள் கலப்படம் செய்து மக்களை கெடுக்கும் தேசவிரோதிகளை கைதுசெய்து கீலே உட்கார வைத்து உள்ளனர்.. ஆச்சி மசாலா ஆபத்து.. வாங்காதீர்கள்…” என்று   ஒரு புகைபடத்தை  பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

அந்த புகைபடத்தில் உள்ளவர்கள் கடந்த 13.10.2020 அன்று ஆச்சி மசாலா பாக்கெட்டுக்குள் போதை மருந்தை மறைத்து வைத்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்றதாகக் கைது செய்யப்பட்டவர்கள் 


மசாலாவுடன் ஆண்மைக் குறைவு மருந்து கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்று சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். 

மத்திய அரசின் கீழ் இயங்கும் Press Information Bureau பி.ஐ.பி தன் ட்வீட்ட்டர் பக்கத்தில் இந்த செய்தியினை வெளியிட்டிருந்தது அதில், சென்னை விமான நிலைய சுங்கத்துறை: மசாலா தூள் பாக்கெட்டில் மறைத்து ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்படவிருந்த ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 3 kg சூடோஎஃபிட்ரின் எனப்படும் போதைப்பொருளை கூரியர் முனையத்தில் NDPS சட்டப்படி கைப்பற்றியது. பிரதான குற்றவாளியுடன் 4 பேர் கொண்ட கடத்தல் கும்பல் பிடிபட்டது” என்று கூறப்பட்டு இருந்தது.


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

 அட்மின் மீடியாவின் ஆதாரம்


அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.facebook.com/aachiproducts/posts/3807583699263063 

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback