Breaking News

FACT CHECK;உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் புகைபடம் என பரவும் புகைபடம் உண்மையில்லை

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்   உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் படம் என்று என்று  ஒரு புகைபடத்தை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது  இளம்பெண் மனிஷா கடந்த 14-ம் தேதி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டார்.
 
மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்தப் பெண் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 
 
இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு உத்தரபிரதேச போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
 
அந்த கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் என கூறி வேறு ஒரு இளம்பெண்ணின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
ஆனால் பலரும் ஷேர் செய்யும் வைரல் புகைப்படத்தில் இருப்பது பாதிக்கப்பட்ட பெண் இல்லை 
 
பலரும் ஷேர் செய்யும் வைரல் புகைப்பட இந்த பெண் 2018ம் ஆண்டு சண்டிகர் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் இறந்த என் தங்கை மனிஷா என அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்
 
 

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback