Breaking News

அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்

அட்மின் மீடியா
0
கொரானா  தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். 
 

கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு எம்எல்ஏவானார்.
 
பின்னர், 2014-ல் சிறை சென்று வந்த ஜெயலலிதா, மீண்டும் போட்டியிடுவதற்காக, ஆர்.கே.நகர் தொகுதியை விட்டுக்கொடுத்து, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவரானார். 
 
இதையடுத்து, 2016 சட்டப்பேரவை தேர்தலில், பெரம்பூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுக இரண்டாக பிரிந்தபோது, சசிகலா அணியை வெற்றிவேல் ஆதரித்தார். 
 
அமமுகவுக்கு ஆதரவாக இருந்த வெற்றிவேலுக்கு அக்கட்சியின் பொருளாளர் பதவி வழங்கப்பட்டது. 
 
இந்நிலையில், அவருக்குக் கடந்த வாரம் கொரானா தொற்று உறுதியானது. இதையடுத்து, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி அவர் இன்று (அக். 15) மாலை காலமானார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback