Breaking News

இனி உங்கள் பாஸ்போர்ட்டில் வெளிநாட்டு முகவரிக்கு இந்திய அரசு அனுமதி

அட்மின் மீடியா
0

வெளிநாட்டில் வசிக்கும் இருப்பிட முகவரியையும் இந்திய பாஸ்ப்போர்ட்டில் சேர்த்து கொள்ளலாம்..!! இந்திய அரசு அனுமதி..




உலகெங்கிலும் உள்ள இந்திய வெளிநாட்டவர்கள் தங்களின் பாஸ்போர்ட்டுகளில் வெளிநாடுகளில் தாங்கள் தங்கியிருக்குஅனுமதி  அளிக்கப்பட்டுள்ளதாக துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதரக பாஸ்போர்ட் மற்றும் சான்றளிப்பு அதிகாரி சித்தார்த்த குமார் பரெய்லி தெரிவித்துள்ளார். 

நிரந்தர அல்லது செல்லுபடியாகும் முகவரிகள் இல்லாதவர்களுக்கு உதவுவதற்காக, வெளிநாட்டு குடிமக்கள் தாங்கள் வசிக்கும் நாடுகளின் இருப்பிட முகவரியை தங்களது பாஸ்போர்ட்டில் அனுமதிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும் இந்திய பாஸ்போர்ட்டில் வெளிநாட்டு முகவரியை பெற விரும்புபவர்கள் தாங்கள் தற்பொழுது வைத்திருக்கும் பாஸ்ப்போர்ட்டில் இணைக்க முடியாது எனவும், முகவரியை மாற்ற விரும்புபவர்கள் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 

இதற்கு அவர்கள் வசிக்கும் வாடகை, சொந்த வீடு தொடர்பான ஆவணங்கள் அல்லது உரிய இருப்பிடச்சான்று தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

source:

https://www.news18.com/news/india/indian-expats-can-now-provide-local-address-abroad-in-passports-3016865.html

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback