Breaking News

தீபாவளி பட்டாசு விற்பனை கடைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி

அட்மின் மீடியா
0

தீபாவளி பட்டாசு விற்பனைக்கு இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் 


தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற அரசு இ சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்


விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்


  • பட்டாசு கடை மற்றும் கட்டிடம் உள்ள வரைபடம் மற்றும் கட்டடத்திற்கான புளு பிரிண்ட் வரைபடம் 


  • கடை  இடம் சொந்த இடமாக இருப்பின் அதற்கான பத்திரம்


  • வாடகை கட்டிடமாக இருப்பின் வாடகை ஒப்பந்தப் பத்திரம் 


  • உரிமத்திற்கான கட்டணம் ரூ.500-ஐ அரசுக் கணக்கில் செலுத்தியமைக்கான அசல் சலான். 


  • மேலும் விண்ணபதாரரின் இருப்பிடத்திற்கான ஆதாரம் 

ஆதார் அட்டை , அல்லதுவாக்காளர் அடையாள அட்டை, அல்லது குடும்ப அட்டை  வரி ரசீது, 


  • பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்


விண்ணப்பிக்க கடைசி நாள்:  23.10.2020


குறிப்பு:

நிரந்தர பட்டாசு விற்பனை உரிமம் கோருவோர் மற்றும் வருடாந்திர உரிமம் புதுப்பித்தலுக்கு இவ்வழி முறை பொருந்தாது. 


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback