செவ்வாய் கிரகம் இன்று பூமிக்கு அருகில் வருகிறது
அட்மின் மீடியா
0
செவ்வாய் கிரகம், சூரியனை சுற்றி வரும் தனது பயணத்தில் இன்று அதன் வட்டப்பாதையில் பூமிக்கு மிக நெருக்கமான வருகின்றது,
அதாவது பூமிக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் இடையிலான அதிகபட்ச தூரம் 40 கோடியே 13 லட்சம் கி.மீ. ஆகும்.
இதில் இன்று பூமிக்கு மிக அருகில் செவ்வாய் கிரகம் வரும்போது, இரண்டுக்கும் இடையிலான தூரம் 6 கோடியே 20 லட்சம் கி.மீ. ஆக இருக்கும்.
இந்த அரிய வானியல் நிகழ்வு இந்திய நேரப்படி இன்று இரவு 7.47 மணிக்கு ஏற்படுகிறது. மேலும் செவ்வாய் கிரகம் இன்று பூமிக்கு அருகில் வரும் நிகழ்வை இரவு முழுவதும் வெறும் கண்களால் பார்க்கலாம்
Tags: இந்திய செய்திகள்