Breaking News

பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் : வேலைவாய்ப்பு இணையதளத்தில் நாளை முதல் பதிவு செய்யலாம்!

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேலைவாய்ப்பு இணையதளத்தில் நாளை முதல் பதிவு செய்யலாம் என வேலைவாய்ப்புத்துறை அறிவித்துள்ளது.
 
 

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நாளைமுதல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. இதனால் மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே தங்கள் கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவுசெய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
நவம்பர் 6ம் தேதிக்குள் அந்தந்த பள்ளிகளிலேயே இணையதளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டும் என்று வேலைவாய்ப்புத்துறை தெரிவித்துள்ளது.

தேவையான ஆவனங்கள்


மாணவர்களின் ஆதார் எண், 

மின்னஞ்சல் முகவரி 

மொபைல் எண்

குடும்ப அட்டை, அகியன தேவைபடுவதால் மாணவ மாணவிகள் தவறாமல் கொண்டு செல்லவும்

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback