அரசு பேருந்துக்கு வழிவிடாமல் சென்ற பைக் ஓட்டுநர் ரூ.10,500 அபராதம்!
கேரளாவில் அரசு பேருந்துக்கு வழி விடாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞருக்கு 10,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபீன் என்பவர் தன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் வந்த அரசு பேருந்து ஓட்டுநர் வழிவிட வலியுறுத்து ஹார்ன் ஒலியை எழுப்பியுள்ளார். ஆனால் ஓட்டுநர் ஒலி எழுப்பிய பிறகும் அதை பொருட்படுத்தாமல் நீண்டநேரம் பேருந்துக்கு வேண்டும் என்றே வழிவிடாமல் பைக் ஓட்டியுள்ளார் அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவுடன் அந்த வீடியோ வைரலாகியுள்ளது
இதை பார்த்த போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனே அவரை பிடித்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து 10,500 ரூபாய் அபராதம் விதித்தனர்.
அந்த வைரல் வீடியோ உங்களுக்காக
Tags: வைரல் வீடியோ